டிசம்பர் 1999, நான் திண்டுக்கல்லில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த தருணம் அது. என் பெற்றோரின் ஊக்கமும் நண்பர்களுடனான பொதுதேர்வு பற்றிய விவாதங்களும் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருந்தன. அந்த சமயத்தில் என் பெற்றோரின் விருப்பப்படி(அ) வேண்டுதலின் படி, கரூர் ரோட்டில் உள்ள வழிகாட்டி விநாயகர் கோவிலில் பொங்கல் படையல் வைத்து மிகச்சிறிய அளவில் அன்னதானம் வழங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம். நான் பத்தாம் வகுப்புப் பொதுதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவே இந்த வேண்டுதல்.
கோவிலை ஒட்டி போதிய இடமில்லாத காரணத்தினால் வீட்டிலேயே பொங்கல் மற்றும் தயிர்சாதம் ஆகியவற்றைத் தயாரித்து எடுத்துக் கொண்டு காலை 8 மணியளவில் கோவிலைச் சென்றடைந்தோம். வழிபாடு, ப்ரார்த்தனைகள் முடிந்தபின் கோவிலுக்கு வந்திருந்தவர்கள், வழிப்போக்கர்கள், பிச்சைக்காரர்கள் மற்றும் அருகாமையில் உள்ள பூக்கடைக்காரர்கள் என கண்ணில் பட்ட அனைவருக்கும் வாழை இலையில் பொங்கலும் தயிர்சாதமும் வைத்துக் கொடுத்தோம். முகம்மலர அவர்கள் பெற்றுக்கொள்ளும் போது மனதில் ஒருவித மகிழ்ச்சியும் திருப்தியும் தோன்றியது.
கோவில் பூசாரி நடையை சாத்துவதில் மும்முரமாக இருந்தார். அடடா, அவரை மறந்து விட்டோமெ என வேக வேகமாக அவருக்கும் பொங்கல் கொடுக்க அவரை நோக்கி நடந்தேன். அவர் கிளம்ப தயாரான நிலையில் அருகில் சென்று பொங்கலை கொடுக்க முற்பட்டேன். அவருடைய கவனம் என்மீது சற்றும் திரும்பவில்லை. அங்கும் இங்கும் பார்த்துவிட்டு ஒதுங்கி சென்றுவிட்டார் என்னை சட்டை செய்யாமல். தன் இருசக்கர வாகனத்தில் ஏறிய அவர், என் பார்வையிலிருந்து மறையும் வரை நான் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தேன். ஒரு மூதாட்டி என் அருகில் வந்தார். இலையை அவரிடம் கொடுத்துவிட்டு திரும்பினேன்.
எல்லாம் முடிந்தாகிய நிலையில் அனைவரும் வீடு திரும்பினோம். அந்த பூசாரி ஏன் என் தானத்தை ஏற்கவில்லை என நான் அப்போது அறிந்திருக்கவில்லை.
அருண் சரவணன்
சனவரி 2003

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக