இப்பொழுதெல்லாம் "உங்கள் திருமணம் காதல் திருமணமா? நிச்சயித்த திருமணமா?" என்று கேட்பது வாடிக்கையாகிவிட்டது. இன்றைய சூழலில் பெரும்பான்மையானோர் கூறும் பதில் காதல் திருமணம் என்பதுதான். அடுத்த கேள்வி என்னவாக இருக்கும் என்று நீங்கள் யூகிப்பது சரியே. "எங்கு எப்படி காதல் உருவானது?" என்பது தானே. அதற்கும் பதில்கள் வரும் பாருங்கள். அவை அனைத்தும் பெரும்பாலும் ஒரே மாதிரியானவையாகவே இருக்கும். பக்கத்து வீடு, எதிர்வீடு, பேருந்தில் தினமும் பயணிப்பவர், அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர், பள்ளி கல்லூரியில் உடன் படித்தவர், தெருவில் நின்றவர், போனவர், வந்தவர், ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்த்தவர் என நீண்டு கொண்டே போகும் பதில்களை கேட்டுக் கேட்டு நாம் சலித்துவிட்டோம்.
நான் எதிர்பார்த்த பதிலை ஒருவர் கூட இதுவரை கூறியதே இல்லை. நான் என் மனைவியை காதலிக்கிறேன் என்றோ முதன்முதலில் பெண் பார்க்க செல்லும் போது காதல் வந்தது என்றோ ஏன் பதில் வருவதே இல்லை. இந்த வீணாப்போன காதலுக்கு எழுபத்திரெண்டு விளக்கங்கள் கவிதைகள் வேறு.
சரி. நம்முடைய கலாசாரத்தில் ஒரு அரை நூற்றாண்டு பின்னோக்கிப் போய் பார்த்தோமேயானால் காதல் என்று ஒன்றோ காதல் திருமணம் என்று ஒன்றோ இருந்திருக்க வாய்ப்பிருந்ததா என்றால் இல்லை. இன்னும் பின்னோக்கி தொன்மையான இலக்கியங்களை அலசி ஆராய்ந்தால் "அகத்திணை", "அகநானூறு" போன்ற இலக்கியங்கள் தலைவன் தலைவி காதலைப் புட்டுப் புட்டு வைக்கிறது. இவை அனைத்துமே திருமணத்திற்குப் பிறகு நடக்கும் காதல் மட்டுமே.
அப்படியானால் இக்காலகட்டத்தில் நிலவும் காதலும் காதல் திருமணங்களும் எங்கிருந்து வந்தன? சனியன் பிடித்த சினிமாவைத் தவிர வேறெங்கிருந்து வந்திருக்க முடியும். சொல்லுங்கள்.
சினிமாவில் தியாகராஜ பாகவதர் துவங்கி இன்றைக்கு சாந்தனு, அதர்வா வரை காதல் தானே செய்கிறார்கள். அது என்னவோ ஒன்று மட்டும் புரியவேயில்லை. ஆணும் பெண்ணும் காதலிக்காமல் சினிமா காட்டவே கூடாதா? இதுவரை வந்த சினிமாக்களை வைத்து காதல் செய்ய கோடி வழிகள்னு புத்தகமே போடலாம்.
ஆலிவுட்ல என்னடான்னா ஒருவன் குரங்கு ஒரு பெண்ணை காதலிப்பது போல் காட்டும் அளவுக்குப் போய்விட்டான். இன்னொருவன் அவதார்னு பிரம்மாண்டமாக படமெடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் காட்டுவது வேற்றுகிரக பெண்ணை கூட விட்டு வைக்காமல் கதையின் நாயகன் காதலிப்பதுபோல். இந்திய சினிமாக்கள் இதைவிட மோசம். ஊருக்குள்ளே பொறுக்கி தின்பவன், ரௌடி, மொள்ளமாரி இவர்களையே பெண்கள் விரும்புவார்கள். இடைப்பட்ட காலத்தில் வந்த படங்களில் ஏழைக் கதாநாயகன் பணக்கார திமிர்பிடித்த கதாநாயகியை அடக்க அவளுக்கு இவர் மேல் காதல் வந்துவிடும். அட, அதை கூட விட்டுவிடலாம். இன்றுவரும் படங்களில் வரும் காதலை என்ன தெய்வீகமாகக் காட்டுகிறார்கள் தெரியுமா? ஒருபெண்ணைப் பார்த்தவுடனே காதல் வந்துவிடுகிறது. கதாநாயகன் பத்து பேரை அடித்து துவம்சம் செய்ததுமே காதல் வந்துவிடுகிறது. நாய் மாதிரி பின்னாடியே சுற்றினால் காதல் வருகிறது. அது ஏன் ஒரு ஐம்பது அறுபது வருடங்கள் முன்னாடி வாழ்ந்த நம்ம தாத்தாவுக்கு தாத்தாக்கள் காலத்தில் இப்படிப்பட்ட காதல்கள் வந்ததேயில்லை?
இங்கே சினிமாவில் ஒரு டைட்டானிக் கப்பலை கவிழ்ப்பதற்குக் கூட காதல் தேவைப்படுகிறது. காதலே பிடிக்காத கதா நாயகன் கடைசி கட்டத்தில் காதலில் விழுவது போல் கண்ணாமூச்சி காட்டுகிறார்கள். காதலியைக் கைப்பிடிக்க ஒருவன் வேலை வெட்டி இல்லாமல் சாணி அள்ளுவதும், காதலிக்காக ஒருவன் பிச்சை எடுக்கும் நிலைக்கு வருவதும் சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்தில் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இங்கு கேடுகெட்ட இளைஞர் காதலை செய்யத் தூண்டுபவை இந்த கேடுகெட்ட சினிமாக்களே. அதிலும் அபூர்வமாய் சில திரைப்படங்கள் உன்னதமான முறையில் வாழ்வியலையும் காதல் தோன்றும் விதத்தையும் கூறியிருக்கின்றன. அவற்றுள் சில "In the mood for love", "முதல் மரியாதை", "நள தமயந்தி" போன்ற சொற்ப எண்ணிக்கையில் உள்ளன. காதல் தானாக வரும், சொல்லிவிட்டு வரும், பார்த்ததும் வரும், பார்க்காமலே வரும் என்பதெல்லாம் சினிமாவால் உருவான பெரும் மாயையே தவிர வேறொன்றுமில்லை.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இந்த தருணத்தில் எனக்குள் இளையராஜா தோன்றி பாடும் வரிகள் இதோ:
இந்தக் கால இளைஞர் செய்யும் காதலுக்கு
இளையராஜா எந்தன் பாட்டிருக்கு...
வீட்டுல அத பாடுங்க பொண்டாட்டிய லவ் பண்ணுங்க
நம்ம தகப்பன் பேச்ச தாயின் பேச்ச மதிக்கணும்
நீயாக பெண் தேடக் கூடாது எனக்கிந்த
(காதல் கசக்குதையா...)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக