அத்தியாயம் ஒன்று
அத்தியாயம் இரண்டு
எல்லா காதலர்களையும் போல நாங்கள் பனிக்கூழ் (அதாங்க ஐஸ்கிரீம்) பார்லருக்கெல்லாம் சென்று காதலித்ததில்லை. ஆனால் ஒரு முறை தொலைபேசி உரையாடலில் நான் ஒரு படத்தின் காட்சியை அவளிடம் விவரித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஐஸ்கிரீம்னாலே அந்தக் காட்சி தான் ஞாபகத்திற்கு வருவதாய் கூறிக் கொண்டிருந்தேன். வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் ப்ரதாப், ஸ்ரீதேவி ஐஸ்கிரீம் சாப்பிடுவதைப் பார்த்து ஒரு வசனம் பேசுவார், "நான் அந்த ஐஸ்கிரீமா இருக்கக் கூடாதான்னு நெனிக்குறேன்" என்று. எங்களின் இந்த உரையாடலுக்கு நடுவில் எங்கோ யாரோ ஐஸ்கிரீமாக மாறியிருந்திருப்பார்கள் தானே?
காதலில் காத்திருப்பு எத்தனை சுவாரசியமானது தெரியுமா? அது நிழற்கடிகாரத்தில் கூட நேரம் பார்க்க விடாது. அவளுக்காகக் காத்திருப்பது ஒரு தவம். அவளின் வருகையே வரம். அது கைபேசி அழைப்பாகட்டும், வேறொரு இணைப்பு துண்டிக்கப்பட்டு என் அழைப்பு ஏற்கப்படும் வரை காத்திருப்பேன். பூங்காவாகட்டும், அவள் வரும் வரை காத்திருப்பேன். வராமல் போனாலும் கூட காத்திருப்பேன் பொறுமை தீரும்வரை.
இப்படித்தான் ஒரு நாள் மாலை நான்கு மணி இருக்கும். இன்னும் பூங்கா திறக்கப்படவில்லை. நானும் திறக்கும் வரை காத்திருந்தேன். அவளுக்காக திறந்தும் காத்திருந்தேன். யார் யாரோ வந்தார்கள். என்னை கடந்து சென்றார்கள். பூங்காவை வட்டமடித்தார்கள். நான் மட்டும் அங்கிருக்கும் சாய்ந்த நாற்காலிகளில் ஒன்றாய் அசைவற்று சாய்ந்து காத்திருந்தேன், இரவோ பகலோ பாராமல் தனிமையில் எதனையோ எதிர்நோக்கி காத்திருக்கும் ஒற்றைப் பனைமரங்களைப் போல்.
இரவு ஒன்பதுக்கு மேல் ஆகியும் அவள் வருவதாய்த் தெரியவில்லை. என் இருபத்தியோரு அழைப்புகளுக்கும் எந்த பதிலும் இல்லை. என்ன ஆயிற்றோ? ஏது ஆயிற்றோ? என்ற படபடப்பு ஒரு பக்கம். பூங்கா கதவடைத்த சோகம் ஒரு பக்கம். எத்தனை தவிப்பு. எத்தனை எதிர்பார்ப்பு. எச்சில் கூட விழுங்காமல் ஏனோ இத்தனை தீவிரம். அழைப்பேதும் வரவில்லை. அவளே வந்தாள். மணி ஒன்பது நாற்பது. அந்த பெயர் மறந்த இளைஞன் பத்து நிமிடங்களுக்கு முன் தான் சென்றிருந்தான்.
என் காத்திருப்பும் பரிதவிப்பும் நான் சொல்லாமலே இது காதலென்று அவனுக்கு உணர்த்தியிருக்கக் கூடும்.
காத்திருப்பு முடிவுற்ற நிலையில் தொடரும்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக