அத்தியாயம் ஒன்று
பேருந்துப் பயணத்தில் தன்னை அறியாமல் நம் தோளில் தலைசாய்த்து உறங்கும் சக பயணியை எழுப்பிவிடக்கூடாதென்ற அக்கரையில் தொடங்குகிறது மனிதர் மனிதர் மீது காட்டும் அன்பு. அப்படி இருக்கையில் என்னை மனதார புரிந்து வைத்தவள்; என்னை முழுவதும் நேசிப்பவள்; என்னோடு வாழ்க்கை முழுவதும் பயணிக்க விரும்பும் ஒருத்தி; அவளை நினைக்கும் பொழுது வாழ்க்கை எத்தனை ரம்மியமானது என்று மனம் சிட்டாய்ப் பறக்கத் துடிக்கிறது. அவளிடம் நான் எத்தனை அக்கரையுடையவனாக நடந்து கொள்ள வேண்டும் என்ற படபடப்பு நெஞ்சைப் பற்றிக் கொள்கிறது.
அவளுடைய உதடுகள் பெரும்பாலும் சிரிப்பை மட்டுமே சிந்திப்பவை. இந்தப் புன்னகை என்ன விலை என்று கேட்காதீர்கள். அது வாடகைக்குக் கூடக் கிடைக்காது. மொத்தமாய் நான் குத்தகைக்கு எடுத்துவிட்டேன். நட்பில் அவள் புன்னகையை தள்ளி நின்று தரிசித்தேன். பின்னர் காதலித்தேன். அது தேன்.
எங்கள் வாழ்வின் பக்கங்களை எழுதிச் செல்ல ஒரு நோட்டுப் புத்தகம் வாங்கி பூங்கா வந்தேன், ஓர் அந்திப் பொழுதில். என் பெயரை எழுதினேன். எதுவும் நடக்கவில்லை. அருகில் அவள் பெயரை மிகுந்த கவனத்துடன் எழுதினேன். இல்லை. இல்லை. வரைந்தேன் என்று வைத்துக் கொள்வோமா. இல்லை. இல்லை. தீட்டினேன் என்று வைத்துக் கொள்வோம். தீட்டி முடிப்பதற்குள் தாளுக்கும் பேனாவுக்குமான இடைவெளியில் காற்றில் மகரந்தமாய் அவள் பெயர் பிரிந்து பறந்து சென்றதை நான் கவனிக்கவில்லை. பூங்கா வாசம் வீசிப் புறப்பட்டது. தென்றல் தரையிறங்கியது. செடிகள் நடனமாடின. அவள் வருமுன் அவளின் வாசம் என்னைச் சேர்ந்தது, மழை வருமுன் மண்ணைச் சேரும் வாசம் போல. அருகினில் அமர்ந்தாள். தொலைவினில் உலகம் நகர்ந்து கொண்டது. இருவருக்கும் உள்ள இடைவெளி குறைந்திருந்தது. கேள்விப்பட்டிருக்கிறேன், இரண்டு மனிதர்களுக்கிடையில் இருக்கும் மிகக்குறைந்த இடைவெளி ஒரு புன்னகை என்று. அது அவளிடம் நிறையவே இருக்கின்றது, சேமித்து வைத்து கண்டபடி செலவு செய்ய.
சில நாட்கள் ஊருக்குப் போய்விடுவாள். தண்ணீர் ஊற்ற யாருமில்லாமல் வாடும் செடிகளைப் போல் நானும் வாடிப்போவேன். மீண்டும் தளிர்க்க அவள் இரயிலேறி வரவேண்டியிருந்தது.
அவளுக்கு நண்பர்கள் சற்றே அதிகம். காதலன் நான் மட்டும்தான். அவளிடம் இருப்பது கைபேசியல்ல, காதுபேசி. அவளுடைய கைகளில் இருக்கும் கணங்களை விட அதிகம் காதுகளிலேயே இருக்கும் கருவி அது. சுதந்திர தினத்தில் சட்டையில் தேசியக் கொடி குத்திக் கொள்கிறாளோ இல்லையோ, எல்லா தினங்களிலும் அவள் தன் நண்பர்களை நெஞ்சில் குத்திக் கொண்டுதான் திரிந்தாள். தன் நண்பர்களுக்காக எதையும் செய்ய ஆசைப்படுபவள், நான் கேட்கும் முத்தங்களுக்கு பதிலளிப்பதில்லை.
காதல் வளர்ந்துகொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையில் தொடரும்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக