அக்டோபர் 13, 2011

சங்கத்தில் பாடாத கவிதை (18+)

 (18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்)


ஒவ்வொரு இரவிலும்
இரண்டு அல்லது மூன்று முறை
அந்த அசம்பாவிதம் நமக்குள்
நிகழ்ந்துவிடுகிறது.

நம் உதடுகள் பரிமாறிக்கொள்ளும்
இரகசியங்களை முத்தங்கள் என்கிறார்கள்.

உன் கூந்தலோடு சேர்ந்த பூவும் மணக்கிறது.

நீ சிக்கெடுத்த கூந்தலில்
சிக்கிக் கொண்டவன் நான்.
என்னை நீ சிக்கெடுப்பது
சற்று கடினமே.

என்னால் களையப்படுவதற்காகவே
நீ செய்து கொள்ளும் அலங்காரம்
எனக்குப் பிடித்திருக்கிறது.

"என் உடையலங்காரம் எப்படியிருக்கிறது?"
என்று கேட்கிறாய்.
உன் உடையலங்கோலம் பற்றியல்லவா
நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

உன் காது மடல், கழுத்துப் பிரதேசம் என‌
பூகோள வரைபடம் ஒன்றை
வைத்துக் கொண்டு திரியும்
வாஸ்கோடகாமா நான்.

விளக்கை அணைத்துவிட்டு
உலகை இயக்கும் விளையாட்டு
அண்டத்தில் வேறுண்டா?

நம் நாலுகால் பாய்ச்சலில்
ஒரு நாகரிகம் உருவாகிறது.
உண்மை அறிவாயா நீ?

மரை கழண்ட பூமி
இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறது,
நம் கட்டில் ஆடிக்கொண்டிருப்பதைப் போல.

நாமும் இயங்குவோமாக...

3 கருத்துகள்:

சேக்காளி சொன்னது…

முதலில் அவசரத்தில் எதுகை மோனையாக "க்" இருப்பதாய் நினைத்து வாசித்து விட்டேன்.இப்படி பச்சையாகவா என்று திரும்பவும் வாசித்த போதுதான்
//உலகை இயக்கும் விளையாட்டு//
என்று சரியாக புரிந்து கொண்டேன்.

சேக்காளி சொன்னது…

"சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தி தேன் பாய்கின்ற உறவை"
இது சங்கத்தில் பாடாத கவிதை பாடலில் வரும் இரு வரிகள்.

அருண் சரவணன் சொன்னது…

அந்தப் பாடலின் நினைவில் எழுத முயன்றதன் விளைவே இங்கு காண்பது! கருத்துரைக்கு நன்றி!

கருத்துரையிடுக