சாத்தான் ஓதும் வேதம் இந்நாட்டில் நாசிக் என்னும் இடத்தில் பல்வேறு பதிப்புகளாக அச்சடிக்கப்பட்டு வருகின்றது. நம் அனைவராலும் வாழ்க்கையை அறியும் நோக்கில் இவ்வேதம் வாசிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதன் மூலம் பொருள் சேர்க்கும் பொருள் விளங்கா மாயலோகத்திற்குள் லயித்துக்கிடக்கிறோம்.
சகல இன்பங்களையும் நம் முன் வைத்துக்கொண்டு அதனை சிலர் மட்டுமே அனுபவிக்க பலர் அனுபவிக்க முடியா வண்ணம் ஏற்றத்தாழ்வுகளை வைத்துக்கொண்டு "எதற்கும் ஆசைப்படாதே" என்றால் எந்த வகையில் அது நியாயமாகும்? புத்தனுக்கு போதி மர நிழலில் சித்தம் களங்கியிருக்க வேண்டும். மனிதனுக்கு ஆசை எந்நாளில் தோன்றியதென்று யாரேனும் அறுதியிட்டுக் கூற இயலுமா?
ஒரு ஆதிவாசிக்கும் நமக்கும் என்ன வேறுபாடு? அவன் நம்மைப் போல மின் கட்டணம் செலுத்துவதில்லை. மின் தடையால் அவதியுறுவதில்லை. நம்மைவிடவும் நிம்மதியான சூழலில் நல்ல உணவுண்டு நன்கு உறங்கி வாழ்ந்து வருகிறான். இதில் யார் பின் தங்கியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
நம்மிடம் காசு இல்லையென்றால் நாய் கூட மதிக்காது என்ற நிர்க்கதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சோற்றுக்கு அலைந்தோம். சோறு கிடைத்த பின் சொகுசுக்கு அலைந்தோம். சொகுசு கிடைத்த பின் சும்மா இருந்தோமா? புகழுக்கு அலைந்தோம். பின் அதிகாரம், ஆட்டம், பாட்டம், முக்தி, மோட்சம், இன்ன பிற. எதனைத் தேடி அலையாமல் இருந்தோம்? இழப்பதற்கோ பெறுவதற்கோ ஒன்றுமில்லை என்பதல்லவா உண்மையான பூரண சுதந்திரம், நிம்மதி எனப்படுவது.
வாழ்க்கையை நாம் துரத்திக்கொண்டு ஓடவில்லை. வாழ்க்கை தான் நம்மை துரத்தியடிக்கிறது. பணங்காய்க்கும் மரங்களாகும் முயற்சியில் வாடி வளர்ந்து காய்ந்து கருகி பூத்து பொசுங்கிக் கிடக்கிறோம்.
வாழும் காலம் முழுதும் பொருள் தேடி பொருள் சேர்த்து வாழ மறந்தவர்கள் நாம். ஆயிரம் அறைகள் கொண்ட மாளிகை நமக்குச் சொந்தமாயினும் நாம் உறங்கப் போவது ஓர் அறையில் தான். ஆயிரம் ஏக்கர் நிலத்தை அபகரிப்பவன் ஒரு ஊரையே வளைத்துப் போட்டாலும் அவனுக்கும் ஆறடிதான் கடைசியில் மிஞ்சும்.
தன் இரைக்காக அலையும் விலங்கு கூட அடுத்த சிற்சில வேளைகளுக்கு மேல் இரையைச் சேமிப்பதில்லை. நம் பாத்திரம் மட்டும் ஊற்ற ஊற்ற நிரம்புவதேயில்லை.
தலைக்குமேல் கடன் இருந்தாலும் சரி, மடியில் அளவுக்கு மீறிய கணம் இருந்தாலும் சரி, தூக்கம் நிச்சயமாக வராது, எந்த மாளிகையில் படுத்தாலும்.
நாம் அனைவருமே பிச்சை தான் எடுத்துக்கொண்டிருக்கிறோம், பாத்திரத்தின் அளவுதான் வேறே தவிர பிச்சை ஒன்று தான். நம் உழைப்பு எல்லாம் ஆசையெனும் விழலுக்கு இறைக்கும் நீரே.
பணம் என்ற காகிததாள் நம்மை கட்டி ஆண்டுகொண்டிருக்கிறது. ஆறறிவு கொண்ட மனிதன் தன் ஆறாம் அறிவால் படைத்த பணமே அவனை அடிமையாக்கி வைத்திருக்கிறது.
எத்தனை கேவலமான ஈனப்பிறவிகள் நாம்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக