மழை நமக்கு மிகவும் பிடித்த ஒன்றாக கருதுகிறோம். மழையை வர்ணித்து
கவிதைகள் வடிக்கிறோம். மழை வராதா என கோடையில் தவிக்கிறோம். ஆனால் மழை
வந்தபின் நனைகிறோமா என்றால் பெரும்பாலான பதில் இல்லை என்பதே. மழை
அடித்துப்பெய்து ஓய்ந்த ஒரு மாலைப்பொழுதில் அலுவலகம் முடிந்து பேருந்தில்
வீடு திரும்புகிறோம். பேருந்தில் அங்கும் இங்கும் இருக்கைகளில் ஈரமாக
இருக்கின்றது. பயணிகள் யாரும் அந்த இருக்கைகளில் அமர தயங்குகின்றனர்
நம்மையும் சேர்த்தே. நம் வீடு இருக்கும் சாலையெங்கும் மழை நீர் தேங்கியும்
ஓடிக்கொண்டும் இருக்கிறது. ஆடையை கைகளில் பிடித்து தூக்கிக்கொண்டு மழை நீர்
படாதவாறு கவனமாக தாவித்தாவி நடந்தே வீட்டை அடைகின்றோம். இதுதான் நமக்கும்
இயற்கைக்குமான தொடர்பாக இன்று இருக்கிறது. இதுதான் நாம் இயற்கையின் மீது
கொண்டுள்ள பற்றுதல், பாசம் எல்லாம்.

இன்று நாம் எதில் ஆர்வம் கொண்டுள்ளோம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கிரிக்கெட், சினிமா, இவற்றை விட்டால் நமக்கு செய்வதற்கோ பொழுதை கழிப்பதற்கோ ஒன்றுமே தேவையில்லை. ஊருடன் கூடி வாழ், தனிமரம் தோப்பாகாது என்பார்கள். ஆட்டுமந்தை, பன்றிக்கூட்டத்திற்கும் கூட இது பொருந்தும். உலகமே பெரும்பாலும் இப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. நாம் வாழும் காலகட்டம் நம்மை இயற்கையை விட்டு எவ்வளவு தூரம் இழுத்துச் சென்றிருக்கிறது என்பதனை உணராமலே வாழப்பழகிவிட்டோம். வணிக விளம்பரங்களின் பின்னால் பொருளுக்கு அலையும் ஆட்டு மந்தைகளானோம். எது இன்றைக்கு வணிகமயமாகவில்லை? காற்றும் நீரும் கூட காசு கொடுத்து வாங்கும் சமூக அவலத்தையும் சகித்து வாழ பழகிக்கொண்டோம். சமூகக்கட்டமைப்பின் சாரம் நம்மை எத்தனை நையப்புடைத்தாலும் அதனை விட்டு வெளியில் வரும் எண்ணமோ தைரியமோ நம்மில பலருக்கு இல்லை என்பதே கசப்பான உண்மை.
நாம் எத்தனை காலம் தான் இக்கட்டான சூழல்களிலும் நமக்குப் பிடிக்காத ஒரு வாழ்க்கையினையும் வாழ்ந்து கொண்டிருப்பது? வாழ்வதென்றால் படித்து பட்டம் பெற்று பணம் சம்பாதித்து மணம் முடித்து பிள்ளைகள் பெற்று வயதான பின் பேரக்குழந்தைகள் பார்த்துவிட்டு செத்துப்போவதா? வேறு ஒன்றுமே இல்லையா? இன்றைய நிலையில் நம்மில் எத்தனை பேருக்கு நீச்சல் தெரியும்? மரம் ஏறத் தெரியும்? ஆனால் பேஸ்புக் தெரியும். கிரிக்கெட் தெரியும். பீஸா பர்கர் தெரியும். எது நம்மில் நிஜம்? எது நம்மில் பொய்? ஏன் இந்த மாற்றங்கள்? இவை தான் நம்மை உண்மையிலேயே மகிழ்விக்கும் விடயங்களா? மின்விளக்குகளை இன்றளவில் கூட பார்த்திராத மனிதர்கள் உலகில் வாழ்கிறார்கள். ஏன்? இந்தியாவிலும் கூட வடகிழக்கில் மின்சாரம் இல்லாத கிராமங்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் நம்மைவிட மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அவர்களின் மொத்த வாழ்க்கையினையும் நான்கு நாள் கோடை விடுமுறையில் அனுபவிக்க ஒவ்வொரு வருடமும் பணம் சேர்த்து அலுவலகத்தில் விடுப்பு வேண்டி நாம் எத்தனை சிரமப்பட்டு திட்டமிடுகிறோம்? அதனை வாழ்க்கை முழுவதும் அனுபவிக்கும் எண்ணம் நமக்கு ஏன் தோன்றுவதே இல்லை? நாம் வியத்தகு விஞ்ஞான தொழில் நுட்பங்களால் முன்னேறி விட்டதாக பெருமை கொள்கிறோம். சகல வசதி வாய்ப்புகளையும் அனுபவிப்பதாக நினைக்கிறோம். ஒரு நாள் மின்சாரம் இல்லாவிட்டால் எத்தனை அவதியுறுகிறோம்? ஒரு நாள் பெட்ரோல் இல்லையென்றால் நாயாக பங்க் தேடி அலைகிறோம். இது தான் நம் விஞ்ஞானம், இது தான் நம் தொழில் நுட்பம். ஒருமுறை என் பள்ளியாசிரியர் நம் மக்களின் வாழ்க்கை மாற்றத்தை மிக எளிய எடுத்துக்காட்டுடன் கூறினார். ஒரு காலத்தில் வீட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே காலை உணவாக இருந்த இட்லி இன்று தினமும் உண்ணும் உணவாக மாறியிருக்கிறது. அக்காலத்தில் இட்லிக்கு மாவாட்டுவதற்கு உரலையும் ஆட்டுக்கல்லையும் பயன்படுத்தினார்கள். உரல் தரையில் இருக்க ஆட்டுக்கல்லை நாம் சுற்றினோம். கை வலித்தது. விஞ்ஞானம் வளர்ந்தது. ஆட்டுக்கல் தொங்க விடப்பட்டு உரல் சுற்றியது. மாவை அள்ளி பாத்திரத்தில் கொட்டினோம். அப்போதும் கை வலித்தது. விஞ்ஞானம் வளர்ந்தது. உரல் சுழன்று கவிழ்ந்து பாத்திரத்தில் தானாக மாவு விழுந்தது. இன்று மாவாட்டுவதே பெரிய வேலையாக இருப்பதால் பாக்கெட்டில் வைத்து ரெடிமேடாக விற்கிறார்கள். நாளை ரெடிமேடாக இட்லியை பாக்கெட் செய்து விற்பார்கள். ஏறகனவே சப்பாத்தி இடியாப்பத்தை இப்படி விற்க ஆரம்பித்து விட்டார்கள். இதுதான் விஞ்ஞானம். இதுதான் முன்னேற்றம். இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது. நாம் விஞ்ஞானத்தின் தொழில் நுட்பத்தின் கண்டுபிடிப்புகளினால் சோம்பேறியாகிக்கொண்டிருக்கிறோம்.

"அவன் ஒரு கிராமத்தான்", "அவன் ஒரு பட்டிக்காட்டான்" என்று இந்த சமூகம் ஒருவனை பார்த்து ஏளனம் செய்ய இவ்வாக்கியங்களை பயன்படுத்துகிறது. உண்மையில் அது "இவன் ஒரு நகரத்தான்", "இவன் ஒரு பட்டணத்தான்" என்றல்லவா கேலி செய்ய வேண்டும். நம் கிராம மக்கள் அனுபவிக்கும் சுகபோக வாழ்வில் கால் பங்காவது நாம் அனுபவிக்கும் வரம் பெற்றிருக்கிறோமா என்றால் இல்லை. நமக்கு பணம் முக்கியம். அதனை சம்பாதிக்க பட்டணம் செல்ல வேண்டும். பட்டணத்திலேயே செட்டில் ஆக வேண்டும். நம் பெற்றோர், உறவுகள், பால்ய நண்பர்கள், சுற்றத்தார், நாம் வாழ்ந்த வீடு, விளையாடிய திடல்கள், தோட்டங்கள், பசும்பால், பனை மரங்கள், கிணறுகள், பம்பு செட்டுகள், குளம், குட்டை எதுவுமே தேவையில்லை. நம்க்கு தேவை எல்லாம் பணம் பொருள் மட்டுமே. அதுதான் வாழ்க்கை, அது தான் இந்த சமூகத்தில் கௌரவம். அது இருந்தால் போதும். மகிழ்ச்சி தானாய் வந்துவிடும். எந்த பிரச்சனையும் வாழ்க்கையில் வராது. இப்படியெல்லாம் மனக்கணக்கு போட்டே நாம் பிணவாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் வாழ்வதற்கான உந்து சக்தி இந்த எந்திரத்தனமான பிற்போக்கு நகர வாழ்வில் நிச்சயமாக இல்லை. வாழ்வின் சாரம் கிராமங்களில் இருக்கிறது. இயற்கையுடன் நெருக்கமாக வாழும் மனிதர்களிடம் இருக்கிறது. காடு மலை கடல் கடந்து மனிதன் அலைந்து திரிந்ததெல்லாம் வேறு மனித நாகரிகம் இருக்கிறதா என்று பார்க்க இல்லை. நாம் வாழ இந்த பூமியில் சிறந்த இடம் எங்கு உள்ளது என்று தெரிந்து கொள்ளத்தானே.
வாழ்வதற்கான உந்துதல் புதிய அனுபவங்களில் கிடைக்கிறது. ஒரு மாற்றாக சிறிது காலம் உங்கள் எந்திர வாழ்க்கையை மறந்துவிட்டு எங்காவது பயணித்துப்பாருங்கள். மாதச்சம்பளம், வார விடுமுறை, ஓவர் டைம், அப்ரெய்சல், ப்ரொமோசன், ஆன்சைட், டூ பெட்ரூம் ஃப்ளாட், ஏசி, ஸ்மார்ட்ஃபோன், கிரிக்கெட், சூப்பர் சிங்கர், பீஸா, ஃப்ரைட் ரைஸ், கேர்ள் ஃப்ரண்ட் என எல்லாவற்றையும் மறந்து துறந்து ஒரு பையில் இரண்டு துணிமணிகளுடன் பயணத்திற்காக சிறிது பணமும் எடுத்துக்கொண்டு கிளம்புங்கள். உலகம் பரந்து விரிந்து திறந்து கிடக்கிறது, நாம் அனுபவிக்க. கடல் அதிசயம், காடு அதிசயம், மலை அதிசயம், மனிதர்களும் கூட அதிசயம் தான். நம் முன்னோர்கள் வாழ்ந்து விட்டுப்போன சுவடுகளாய் பல ஆயிரம் கோயிலகள், பிரம்மாண்டமான அரண்மனைகள் இன்றும் அவர்கள் பெயர் சொல்லும்படி கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுமே இல்லை என்பவன் பிறவிக்குருடன். காலங்காலமாய் வாழ்ந்து மறைந்த பல நாகரிகங்களின் வரலாறு அவற்றில் புதைந்து கிடக்கிறது. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையினயும் நாம் வாழும் இன்றைய வாழ்க்கையினையும் கொஞ்சம் ஒப்பிட்டால் கூட நாம் அற்பமாகவே தெரிவோம். இன்றும் கிராமங்களில் மனிதர்கள் எவ்வளவு நெருக்கமாக வாழ்கின்றார்கள் என்று ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து அறிந்துவிட்டு வாருங்கள். நாம் வாழும் ஃப்ளாட்டுகளில் மனிதர்கள் வாழ்வதில்லை. ஒரு அலமாரியில் வைத்து எடுக்கப்படும் பொருட்களைப்போல மனிதர்கள் தங்கிச் செல்கிறார்கள். அவ்வளவே. நம் நகர வாழ்க்கையில் ஒரு உயிரின் பிறப்போ இறப்போ இரண்டு மணி நேர ஆரவாரத்தில் இயல்பு என்று கூறும் எந்திர வாழ்க்கைக்குத் திரும்பி விடுகிறது.
இழக்க ஒன்றும் இல்லாதிருப்பதே சுதந்திரம், நிம்மதி எல்லாம். மடியில் கணமிருந்தால் மனதிலும் இருக்கத்தானே செய்யும். ஒரு வாரம் உலகிற்கும் உங்களுக்குமான தொடர்பை துண்டித்து விட்டு எந்த கட்டுக்குள்ளும் அடங்காமல் ஓடும் பெரு நதியைப்போல பயணித்துப்பாருங்கள். தொலைதூர கிராமங்களில் வாழும் பல தரப்பட்ட மனிதர்களை சந்தித்துப்பாருங்கள். கட்டுப்பாடுகளற்ற நிர்ப்பந்தங்களற்ற பரிபூரண சூழ்நிலையே வாழ்வின் அற்புதமான கணமாகும். அப்படிப்பட்ட நிலையை வாழ்நாளில் அடைய விரும்பிய ஒரு மனிதன் தான் கிறிஸ்டோஃபர் மெக்கேண்டில்ஸ். இளங்கலைப்பட்டம் முடித்த கையோடு தான் வைத்திருந்த இருபத்தைந்தாயிரம் டாலர்களை ஒரு சேவை மையத்திற்கு அனுப்பிவிட்டு கையிலிருந்த மிச்ச பணத்தையும் எரித்து விட்டு தான் பயன்படுத்திய காரை ஒரு நெடுஞ்சாலையோரத்தில் விட்டுவிட்டு அலாஸ்கா காடுகளின் பெருவெளிகளை நோக்கி ஒரு சாகச பயணத்திற்கு தயாராகிறான். அவன் நாம் எதிர்கொள்ளும் எதார்த்தத்திற்கு முற்றிலும் மாறுபட்ட அப்பாற்பட்ட எண்ணங்களுடன் வாழ முற்பட்ட ஒரு இளைஞன். அவனுடைய தேடல் அற்புதமானது. மனித சமூகத்தின் குப்பைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஒரு தூய அப்பழுக்கற்ற உலகை நோக்கி அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் சாகசங்களும் சங்கடங்களும் நிகழ்ந்ததாகவே இருந்தது. அவன் விரும்பிய எளிய வாழ்வை அடைய ஆன முயற்சிகளை செய்தான். சிக்கலான சமூக கட்டமைப்பை அவன் சிற்றளவும் விரும்பவில்லை. நம் கல்விமுறை, கல்வியே கூட தேவையற்ற ஒன்றாகவே கருதினான். "கல்வி, வேலைவாய்ப்பு என்பதெல்லாம் இருபத்தியோராம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பு, அது எனக்குத் தேவையில்லை." என்று காலத்திற்கு அப்பாற்பட்டு சிந்தித்தான். அவன் பார்வை விசாலாமானதாகவும் விரும்பியதை மட்டுமே செய்யும்படியான எண்ணங்களையுமே பிரதிபலித்தது. தான் மீண்டும் பிறந்ததாக உணர்கிறான். தனக்கான விடியல் அப்பொழுதுதான் உதயமாகி உண்மையான வாழ்க்கையை தான் வாழ ஆரம்பித்திருப்பதாக மகிழ்கிறான். சமூக கட்டுக்குள் இருக்கும் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபட்டு புதிதாகப் பிறந்ததாய் உணர்கிறான். காட்டில் கிடைக்கும் விஷத்தன்மையற்ற தாவரங்களைப்பற்றிய ஒரு புத்தகத்தை தன்னுடன் வைத்துக்கொள்கிறான். தான் வழியில் சந்தித்த மனிதர்களை நினைவு கூறுகிறான். தான் விரும்பியபடியே வாழ்ந்த அந்த குறுகிய நாட்களில் எவரும் அனுபவித்திராத அனுபவங்களையும் புத்துணர்வையும் பெற்றாலும் தனிமை அவனுக்கு கடைசியில் ஒரு பாடத்தை கற்பிக்கிறது. மகிழ்ச்சி என்பது பகிர்ந்துகொள்ளும் பொழுது மட்டுமே முழுமை பெறுகிறது என்பது தான் அது. தவறான ஒரு தாவரத்தை உட்கொண்டு தன் வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கும் நிலைக்கு உடல்நிலை சென்றுவிடுகிறது. சில வாரங்கள் கழித்து ஒரு மான் வேட்டைக்காரரால் அவனுடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. உயிருடன் எடுக்கப்பட்ட அவனுடைய கடைசி புகைப்படம் கீழே. அதில் தெரியும் அந்தப் புன்னகை உணர்த்துவது வாழ்க்கை நமக்காக படைக்கப்பட்டது. அதனை விரும்பிய முறையில் வாழ பழகிக்கொள்ளுங்கள். போலியான உலக வாழ்க்கைக்கு உங்களை தாரைவார்த்து கொடுத்துவிட்டு பிரச்சனைகள் வந்தபின் புலம்பிக்கொண்டோ சகித்துக்கொண்டோ வாழ்வது நரகமேயன்றி வேறொன்றுமில்லை.

இன்னது தான் சமூகம், இது படித்து இந்த வேலைக்குத்தான் போக வேண்டும். இந்த வர்க்கத்தை சேர்ந்த பெண்ணை தான் மணம் முடிக்க வேண்டும். இந்த பள்ளியில் தான் குழந்தையை படிக்க வைக்க வேண்டும். இந்த மாதிரி தான் வீடு கட்டி கார் வாங்கி வாழ வேண்டும். இது தான் கௌரவம். இது தான் வாழ்க்கை என்று எந்திரத்தனமாக இருக்காதீர்கள். நாம் உணர்வுகள் உள்ள மனிதர்கள்.

கீழிருக்கும் புகைப்படத்தில் இருக்கும் நண்பர் வினோத் குமார் கடந்த ஐந்து வருடங்கள் தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை பார்த்துவிட்டு இந்த எந்திரத்தனமான சமூக வாழ்க்கை பிடிக்காமல் வேலையை விட்டு விட்டு தான் சேர்த்து வைத்திருந்த சிறிய தொகையை எடுத்துக்கொண்டு ஏழு மாதங்களில் பெரும்பாலான இந்தியாவையும் சுற்றி பயணித்து வந்திருக்கிறார். இந்த மாத இறுதிக்குள் முழு இந்தியாவை சுற்றி வந்து விடுவார். வாழ்வின் தாகம் தீரும்வரை பயணிப்பேன் என்று கூறுகிறார். தான் சந்திக்கும் புதிய இடங்களைக்காட்டிலும் புதிய மனிதர்களையே கண்டு பிரமிக்கிறார். எங்குமே முன்பதிவு செய்தோ திட்டமிட்டோ செல்லாமல் கிடைத்த இரயிலில் பயணித்து கிடைத்த இடங்களில் தங்கி கிடைத்ததை சாப்பிட்டு இந்தியாவை சுற்றி வந்திருக்கிறார் வினோத் குமார். செல்வ செழிப்பு என்பது பணத்தில் அல்ல, குணத்தில் என்பதற்கு நல்ல உதாரணம் இவர். சிறந்த வரலாற்று பின்னனியுடைய இயற்கையுடன் நெருங்கி வாழும் மக்களை சந்தித்து அவர்களைப்போல வாழ வேண்டுமென்பதே இவருடைய அடிப்படை குறிக்கோள். நாடோடிகளுக்கும் நமக்கும் உள்ள இடைவெளிகளை அறுத்தெறியும் கலையை அறிந்தவர் வினோத் குமார். தன்னுடைய வாழ்க்கையை தானே தீர்மானிக்கும் ஒவ்வொரு மனிதனும் முழு மனதுடன் முழு ஈடுபாட்டுடன் தான் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் முடிக்கிறான். விதி என்பது நமக்கு நாமே எழுதிக்கொள்வது. நமக்கு நாமே எழுதும் விதி நாம் விரும்பும் வாழ்க்கையாக இருக்க வேண்டுமே தவிர யாரோ எங்கோ அவிழ்க்கும் முடிச்சால் இங்கு நமக்கு போடும் கைவிலங்காக அது இருக்கக்கூடாது என்பதற்கு வினோத் குமார் நல்ல உதாரணம். அவர் இப்பொழுது அவருக்காக வாழ்கிறார். நாம் இந்த சமூகத்தில் இப்படி இருந்தால் தான் வாழ முடியும் என்றோ இப்படி வாழ்வது தான் எனக்கு பிடித்திருக்கிறது என்றோ சப்பைகட்டு கட்டிக்கொண்டு எப்படியோ காலத்தை ஓட்டத்தான் போகிறோம். எனினும் நம் வாழ்க்கையை நாம் தீர்மானிப்போம், பணமோ பொருளோ பகட்டோ அல்ல. எவன் ஒருவனால் போலியான ஒரு சமூக வாழ்க்கைக்காக தன் நேரத்தை தனக்காக முழுமனதுடன் செலவு செய்து காலம் முழுதும் வாழ முடியவில்லையோ அவன் வாழவே தகுதியற்றவனாகிறான்.

வினோத் குமாரைப் பற்றி இந்து இணைய இதழில் வெளிவந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு:
http://www.thehindu.com/life-and-style/nxg/article3424949.ece

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக