குடும்ப உறவுகள், நண்பர்கள், சுற்றத்தார் என இந்த சமூகத்தில்
நம்மைச்சுற்றி இருப்பவர்களால், நம் வாழ்வில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளில்
நாம் எடுக்கும் முடிவுகளே நம் வாழ்வின் போக்கை தீர்மானிக்கின்றன. நாம்
எடுக்கும் முடிவுகள் நமக்கோ நம்மைச்சுற்றி இருப்பவர்களுக்கோ சாதகமாகவோ
பாதகமாகவோ அமையலாம். இன்றைய இந்தியாவின் பொருளாதாரச் சூழலில் ஒரு தனி நபர்
தன் குடும்பத்தை காப்பாற்றவும் ஒரு சமூக அந்தஸ்தை அடையவும் வேண்டி பணம்
பொருள் ஈட்ட பெருநகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று பல வருடங்கள்
குடும்ப உறவுகளைப் பிரிந்து வாழ்ந்து சம்பாதித்து வருகின்றனர். சிலர்
குடும்பத்தை பிரிய மனமில்லாமல் கிடைத்த வேலை, கிடைத்த வருமானத்தை
வைத்துக்கொண்டு திருப்தியுடனோ அதிருப்தியுடனோ வாழ்கின்றனர். ஏதோ ஒரு
வகையில் நாம் வாழ்வில் திருப்தியடைய, நிம்மதியடைய நிறையவே இழக்க
வேண்டியிருக்கிறது. இது போன்றே நம் வாழ்க்கையின் நிலை நாம் வாழும்
காலத்துக்கும் நீடித்தால், வயது முதிர்ந்த காலத்தில் நம்மை பெற்றவர்களை
காப்பாற்றவோ ஆதரிக்கவோ அவர்களை நம்முடன் அரவணைத்துக்கொள்ளவோ மறந்து
விடுகின்றோம். அப்படியே அவர்களை ஆதரித்து கூடவே வைத்துக்கொள்ள
மனமிருந்தாலும் மனைவி, குழந்தைகள் என்ற தனிக்குடும்ப வட்டம் நம்மை
தீர்க்கமான முடிவுகள் எடுப்பதிலிருந்து குழப்பிவிடுகிறது.
நமக்கு மனைவியாக வருபவள் அழகாகவும் அன்பானவளாகவும் பெரியவர்களை மதிக்கத்தெரிந்தவளாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். நமக்கு கணவனாக வருபவர் நல்ல சமூக அந்தஸ்துடையவராகவும், பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டுமென்று பெண்கள் விரும்புகிறார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை. மனிதர்கள் அவரவர் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதிலேயே குறியாக இருப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் குடும்பம் என்பது ஆயிரம் முரண்கள் இருப்பினும் சகித்துக்கொண்டு வாழப்பழகிக்கொள்வதே ஆகும். பிரச்சனை இங்குதான் தொடங்குகிறது. "நீ எனக்கு முக்கியத்துவம் தருவதில்லை. உன் பெற்றோரைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருக்கிறாய். எனக்கு என் குடும்ப முன்னேற்றம் முக்கியம். எனக்கு என் குழந்தையின் படிப்பு முக்கியம். என்னால் உன் பெற்றோரை பார்க்க இயலாது. நான் உன்னை திருமணம் செய்து கொண்டதால் இழந்தது தான் அதிகம். " இவ்வாறு சிறு சிறு நிகழ்வுகளில் தொடங்கும் பிரச்சனைகள் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் பூதாகாரமாக வெடிக்கும். அப்படிப்பட்ட தருணங்களில் இருதரப்பினருமே எதிர்கொள்ளும் சங்கடங்கள், மனக்கசப்புகள் ஏராளம். இதில் முக்கியமான ஒன்றை நாம் மறந்துவிட்டோம். கணவன் மனைவி சண்டை சச்சரவுகளில் பெரிதும் பாதிக்கப்படும் குழந்தைகளின் மனநிலையை எவருமே கண்டுகொள்வதில்லை. சமீபத்தில் ஒரு காணொளியைப் பார்த்தேன். அதில் பிரபல நடிகர் ஒருவர் தன் பேரனுடன் விமான நிலையத்தைவிட்டு வெளியே வருகிறார். அப்பொழுது அங்கு வந்த அந்த சிறுவனுடைய தாய், அதாவது அந்த நடிகரின் மகள் (அவரும் ஒரு நடிகையாக இருந்தவர்), தன் மகனை தன்னிடம் ஒப்படைக்குமாறு தந்தையுடன் வாதத்தில் ஈடுபடுகிறார். சுற்றிலும் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். இங்கு பிரச்சனை என்னவென்றால் அந்த நடிகை தன் முதல் கணவருடனான மண வாழ்க்கை பிடிக்காமல் விவாகரத்து பெற்று மறுமணம் செய்து கொள்கிறார். முதல் கணவருடன் பிறந்த மகனை தன்னுடன் வாழ நிர்ப்பந்திக்கிறார். இந்த பிரச்சனை சம்பந்தப்பட்ட சில வழக்குகள் கூட நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில் விமான நிலையத்தில் நடைபெறும் சம்பவத்தில் அச்சிறுவனின் ஒரு கையை அவனுடைய தாத்தா ஒருபுறம் இழுக்கிறார். மறுபுறம் ஒரு கையை அவனுடைய தாயும் அவருடைய இரண்டாவது கணவரும் இழுத்துக்கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனை பத்திரிக்கையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படம்பிடித்துக்கொண்டிருக்கின்றனர். அந்தக் காணொளியை மிகுந்த சிரமத்துடனே பார்த்து முடித்தேன். அந்த சிறுவன் அனுபவிக்கும் அவஸ்தையை பார்த்து என் அழுகையை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. சில மணித்துளிகள் மனம் முழுக்க மிகுந்த கணத்துடனே அமர்ந்திருந்தேன்.
மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக சுய இலாபத்திற்காக நெருங்கிய குடும்ப உறவுகளிடம் கூட நம்மை பெற்றவர்களிடம் கூட, நாம் பெற்ற பிள்ளைகளிடம் கூட இவ்வளவு மோசமாக நடந்துகொள்ள முடியுமா? என்பதற்கு மேற்சொன்ன சம்பவம் ஒரு சிறிய எடுத்துக்காட்டு. நம்மால் அந்த இடத்தில் அந்த சிறுவனின் இடத்தில் இருந்து கொண்டு என்ன செய்துவிடமுடியும். கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். நாம் வாழ்வில் எத்தனை முடிவுகளை எடுக்கிறோம். இப்படி ஒரு சூழல் நம் வாழ்வில் வந்தால் நாம் எப்படிப்பட்ட வலியை ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்று நினைக்கவே கோபமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. ஒரு சில மணித்துளிகளுக்குள் நடந்த அந்த சம்பவத்தை காணும்போதே நாம் எந்த முடிவும் எடுக்க இயலாத ஒரு இக்கட்டான சூழலுக்குள் சிக்கிக்கொள்கிறோம். நம்மை விடவும் பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் நாடுகளில், ஈரான் போன்ற மதக்கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் நிறைந்த நாட்டில் வசிக்கும் ஒரு மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்குள் நடக்கும் பிரச்சனைகளையும் பிரிவையும் துள்ளியமாகவும் விறுவிறுப்புடனும் மிகுந்த வலியுடனும் நம் முன் பிரதிபலிக்கும் ஒரு படமே A Separation (ஒரு பிரிவு).

திருமணமாகி 14 வருடங்கள் கழித்து வரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது குடும்பத்தை முன்னேற்றி விட முடியாதா என கணவனிடம் போராடும் மனைவியாக சிமின். அல்ஜெமிர் என்ற மறதி நோயால் அவதிப்படும் தன் தந்தையை பார்த்துக்கொள்ள இந்த நாட்டிலே தான் நாம் இருந்தாக வேண்டுமென்று மனைவியை நிர்ப்பந்திக்கும் கணவனாக நாதெர். இருவருக்கும் இடையில் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கும் 11 வயது மகளாக ரசியா. இவர்களுக்குள் நடக்கும் மனப்போராட்டமும், தம்பதியரின் பிரிவால் நடக்கும் பின் விளைவுகளுமே நம்மை திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைத் தாண்டியும் இழுத்துச் செல்கிறது.
நாதெர் தன் தந்தை மீது அவர் வைத்துள்ள பாசம் நம் கண்களில் நீரை வரவழைக்கத் தவறுவதில்லை. மனைவி பிரிந்து சென்றபின் ஒரு நாள் மாலை வேலை முடிந்து வீடு திரும்புகையில் தன் தந்தை கழிப்பறையில் விழுந்து கிடக்கிறார் தூக்க ஆளில்லாமல். தன் மகளுடன் வீட்டுக்குள் நுழையும் நாதெர், தந்தையை தேடுகிறார். கழிப்பறையின் கதவு அருகில் உள்புறம் இருக்கும் தந்தையை அழைக்கிறார். மீண்டும் மீண்டும் கதவைத்தட்டி தந்தையை அழைக்கிறார். "அப்பா விலகிக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் நான் கதவை திறக்க முடியும், இப்பொழுது நான் கதவைத்திறந்தால் உங்களுக்கு அடிபட்டு விடும், தயவு செய்து விலகிக்கொள்ளுங்கள்" என்று கத்துகிறார், அன்பாகவும் சொல்லிப் பார்க்கிறார். தந்தைக்கு எதுவுமே புரியவில்லை. வேறு வலியில்லாமல், கதவைத்தள்ளி உள்ளே செல்கிறார். மகள் ரசியா வெளியே அழுகையை அடக்க முடியாமல் நிற்கிறாள். தன் தந்தையை தூக்கி சக்கர நாற்காலியில் அமரவைத்து அவர்மேல் இருக்கும் அழுக்கை துடைத்து குளிப்பாடுகிறார் நாதெர். அவரால் அடக்கமுடியாத அழுகை கண்களில் நீராய் பொங்கி நிற்கிறது. தந்தையில் மடியில் தலைசாய்த்து கதறி அழுகிறார். நம் இயலாமை நம் பாசத்திற்குரியவர்களை பார்த்துக்கொள்ள இயலாமல் போகும் தருணம் அடக்க முடியாத வேதனையும் வலியும் அழுகையாய் பீறிட்டு வருகிறது. நாம் ஒன்றை இழந்தும் எதையுமே சாதிக்க முடியாமலும் போகும் பொழுது நம் உணர்வுகள் நம்மை ஆட்கொண்டுவிடுகின்றன. அது அவசர முடிவுகளை எடுக்க வைத்து நம்மை மேலும் துன்பத்தில் ஆழ்த்திவிடுகின்றது.

இந்த சம்பவத்துக்குப்பின் ஒரு கீழ்த்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை தன் தந்தையை பார்த்துக்கொள்ள வேலைக்கு அமர்த்துகிறார் நாதெர். அப்பெண் தன் சிறுவயது மகளுடன் வந்து வீட்டையும் நாதெரின் தந்தையையும் கவனித்துக்கொள்கிறார். வாழ்வில் தோற்று வேலையில்லாமல் இருக்கும் அப்பெண்ணின் கணவர், அப்பெண் கர்ப்பமாக இருப்பது, என பலதரப்பட்ட காரணங்களால் பின்னப்பட்ட சூழல்களுடன் கதை நகர்கிறது.

முழு படத்தையும் இங்கு சொல்வது சரியாகாது.

நம் உணர்வுகளின் வெளிப்பாடும் அதன் விளைவுகளும் நம் வாழ்க்கையினையோ நம்மை சுற்றி வாழ்பவர்களின் வாழ்வினையோ புரட்டிப்போடலாம். நாம் எடுக்கும் முடிவுகள் சரியா தவறா, நம்மையோ நம்மைச் சார்ந்தவர்களையோ பாதிக்குமா பாதிக்காதா என்று பொறுமையாக ஆராய்ந்தும், சில பல காரணங்களால் நம் வாழ்வில் மிகுந்த வலியோ வேதனையோ ஏற்படும் தருணங்களில் அதனை எதிர்கொள்ளும் வலுவான மனநிலையுடன் எதனையும் எதிர்கொள்ள வேண்டுமென்பது போன்ற பல்வேறு கருத்துக்களை இப்படம் நமக்கு ஆழமான உணர்த்துகிறது.

படத்தின் இறுதிக்காட்சி நம்மை நோக்கி ஒரு மாபெரும் கேள்வியை எழுப்புகிறது. முடிவெடுக்க வேண்டிய இடத்தில் நம்மை நிறுத்திவிட்டு படம் அமைதியாக நிறைவடைகிறது, நம் அமைதியை நிலைகுலையச் செய்துவிட்டு.

- திருமணமான ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது.
- சூழ்நிலையை காரணம் காட்டி பெற்றவர்களை பிரிந்து வாழும் ஒவ்வொரு பிள்ளையும் பார்க்க வேண்டிய படம் இது.
- வாழ்க்கையின் விளிம்பில் அடிபட்டு நொந்துபோய் இழக்க ஒன்றுமே இல்லாமல் கீழ்தட்டு வர்க்கத்தில் விரக்தியில் வெறுப்புடனே இச்சமூகத்தை மேல்தட்டு வர்க்கம் என்றாலே கெட்டவர்கள் என்ற நோக்கில் அணுகும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது.
- எதார்த்த சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது.
- குறிப்பாக சமீபத்தில் தமிழில் வெளிவந்த வழக்கு எண் 18/9 படத்தில் வரும் ஏழை நல்லவன், பணக்காரன் கெட்டவன் என்ற பிற்போக்கு எண்ணத்துடன் இருப்பவர்கள் பார்க்க வேண்டிய படம் இது.

நம் உணர்வுகளின் வெளிப்பாடும் அதன் விளைவுகளும் நம் வாழ்க்கையினையோ நம்மை சுற்றி வாழ்பவர்களின் வாழ்வினையோ புரட்டிப்போடலாம். நாம் எடுக்கும் முடிவுகள் சரியா தவறா, நம்மையோ நம்மைச் சார்ந்தவர்களையோ பாதிக்குமா பாதிக்காதா என்று பொறுமையாக ஆராய்ந்தும், சில பல காரணங்களால் நம் வாழ்வில் மிகுந்த வலியோ வேதனையோ ஏற்படும் தருணங்களில் அதனை எதிர்கொள்ளும் வலுவான மனநிலையுடன் எதனையும் எதிர்கொள்ள வேண்டுமென்பது போன்ற பல்வேறு கருத்துக்களை இப்படம் நமக்கு ஆழமான உணர்த்துகிறது.

படத்தின் இறுதிக்காட்சி நம்மை நோக்கி ஒரு மாபெரும் கேள்வியை எழுப்புகிறது. முடிவெடுக்க வேண்டிய இடத்தில் நம்மை நிறுத்திவிட்டு படம் அமைதியாக நிறைவடைகிறது, நம் அமைதியை நிலைகுலையச் செய்துவிட்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக